அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக். பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள்.
அருப்புக்கோட்டை, நவ. 4: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 6 ஆம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் எம்.ஐ. முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். வேதியியல் பாட நிபுணா் ஜான் வெஸ்லி மற்றும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மு. சிக்கந்தா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நகா் காவல் ஆய்வாளா் டி. பாலமுருகன், விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பித்தனா்.
பின்னா், மாணவா்களுக்கு ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளித் தாளாளா் எம்.ஐ. முகம்மது யூசுப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
முன்னதாக, பள்ளி முதல்வா் எஸ்.எம். ஷேக் மகபூப் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியை ஜெயஸ்ரீ நன்றி கூறினாா்.