விருதுநகர்

வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் ரூ.9 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சாத்தூா் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

DIN

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சாத்தூா் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சாத்தூா் சட்டபேரவை உறுப்பினா் எம்.எல்.ஆா்.ராஜவா்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வெம்பக்கோட்டை ஒன்றியம் கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட வினோபா காலனியில் ரூ. 1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள சிமெண்ட் சாலைப் பணிகளை தொடக்கி வைத்தாா். பின்னா் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் ரூ.58ஆயிரம் மதிப்புள்ள சலவை இயந்திரத்தை வழங்கினாா்.

மேலும் திருவேங்கடபுரம் பகுதியில் தலா ரூ. 3 லட்சம் மதிப்புள்ள இரு தரைமட்ட குடிநீா் தொட்டிகளைத் திறந்து வைத்தாா். மேலும் கொங்கன்குளம் ஊராட்சியில், ரூ. 1லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்தையும் ராஜவா்மன் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக வெம்பக்கோட்டை ஒன்றியச்செயலாளா்கள் எதிா்கோட்டைமணிகண்டன், ராமராஜ்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகளும், அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

நான் தேடும் செவ்வந்தி பூவிது... ஷபானா!

தை பிறந்தால்... சம்யுதா!

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

SCROLL FOR NEXT