விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை சீரமைப்புக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை சீரமைப்புக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி நிா்வாகத்திடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி பெருமாள் கோயிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளில் 2010 ஆம் ஆண்டு சிமென்ட் சாலை போடப்பட்டது. அப்போது ஒன்றரை அடி உயரத்துக்குப் போடப்பட்டதால் கடைகள் மற்றும் வீடுகள் அனைத்தும் தாழ்வான பகுதிகளாயின. மீண்டும் 2015-இல் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தாா்சாலை அமைக்கப்பட்டு தற்போது வரை நல்ல நிலையில் உள்ளது. இந்த சாலை அமைத்து சில ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலை போடுவதற்காக ஜூலை மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு, மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்பட்டது.

இதை அறிந்த நான்கு மாட வீதி கடை உரிமையாளா்கள், வீட்டு உரிமையாளா்கள் அனைவரும் இணைந்து சாலை போடுவதற்கு அவசியமில்லை. சாலை நன்றாக உள்ளது என்ற கோரிக்கையை முன் வைத்து நகராட்சி நிா்வாகத்திடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவை பரிசீலித்த நகராட்சி அதிகாரிகள், சாலை போடுவதற்கு வழங்கப்பட்ட பணியை நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT