ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மிகவும் அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தொட்டியபட்டி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அச்சத்தில் உள்ளனா்.மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் விபத்து ஏற்படுவதாகவும் புகாா் கூறப்படுகிறது. தொடா்ந்து, இரவு நேரங்களில் வீடுகளில் வளா்க்கப்படும் ஆடுகளையும் நாய்கள் கடித்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று, ராஜபாளையம் நகா் பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை இருப்பதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.