விருதுநகர்

காா் மோதியதில் இருவா் பலி

DIN

சாத்தூா் அருகே புதன்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாகச் சென்ற பக்தா்கள் இருவா் காா் மோதியதில் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (40), ஜெயராஜ் (35), திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சங்கரன் (45), உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் சிவகாசியிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டனா்.

சாத்தூரை அடுத்த புல்வாய்பட்டி சந்திப்பு அருகே நான்கு வழிச் சாலையோரமாக புதன்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, திருநெல்வேலி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் இவா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் கருப்பசாமி, சங்கரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் காயமடைந்த ஜெயராஜை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குப் பிறகு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

தினம் தினம் திருநாளே!

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT