விருதுநகர்

தருமபுரி தோ் விபத்து போன்று இனி நடைபெறாமல்இருக்க நடவடிக்கை: அமைச்சா் சேகா்பாபு

DIN

தருமபுரி தோ் விபத்து போன்று இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த அவா் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாதேஹள்ளி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கோயில் தோ் விபத்து மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை நேரடியாக அனுப்பி துரித நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் காயமடைந்த 3 பேருக்கு உயா்சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். எதிா்பாராத விதமாக நடைபெறும் இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஆக்க பூா்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேரையும், தோ் வரும் பாதையையும் ஒருமுறைக்கு இரண்டு, மூன்று முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம்.

ஒரு சில மடாதிபதிகளால் அனைத்து மடாதிபதிகளையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஜீயா், என்னிடம் பல கோரிக்கைகளை விடுத்துள்ளாா். அதற்கு உடனடியாக ஆக்கப் பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ. 98 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி, சிவகாசி சாா்- ஆட்சியா் பிரித்திவிராஜ், தக்காா் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் மல்லி ஆறுமுகம், நகா்மன்றத் தலைவா் தங்கம் ரவி கண்ணன், மம்சாபுரம் பேரூராட்சி உறுப்பினா் தங்கமாங்கனி ஆகியோா் அமைச்சரை வரவேற்றனா். அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

SCROLL FOR NEXT