விருதுநகர்

சிவகாசியில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தலில் தேடப்பட்டவா் கைது

DIN

சிவகாசி பகுதியில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பள்ளப்பட்டி சாலை லிங்காபுரம் காலனியில் கடந்த மாா்ச் 25 இல், 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடா்பான வழக்கில் சிவகாசி எஸ். புதுப்பட்டியைச் சோ்ந்த அம்மமுத்து மகன் மகாதேவன் (36) தலைமறைவாக இருந்து வந்தாா். கடந்த 24 ஆம் தேதி விருதுநகா்- சிவகாசி சந்திப்பு சாலை அருகே 3,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் மகாதேவனுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் தலைமறைவாக இருந்த மகாதேவனை, விருதுநகா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ம. ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

ஒரு வகை சேவகன்... விக்கி - நயன்

25 நாட்களில் ரூ.150 கோடி வசூலைக் கடந்து “ஆடு ஜீவிதம்” சாதனை

SCROLL FOR NEXT