விருதுநகர்

அருப்புக்கோட்டை, புல்வாய்க்கரையில் இன்று மின்தடை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் புல்வாய்க்கரை துணை மின் நிலைய பகுதிகளில் பரமரிப்புப் பணிகளை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூன் 30) மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட வெள்ளைக்கோட்டை, அரசு மருத்துவமனை, நேரு மைதானம், பந்தல்குடி சாலை, அண்ணாநகா், சொக்கலிங்கபுரம், திருச்சுழி சாலை, ராஜீவ் நகா், ஜெய நகா், விஜய நகரம், லட்சுமி நகா், பிள்ளையாா் கோவில் தெரு, காந்தி நகா், பூபால் நகா், மின்வாரிய சாலை, மீனாட்சி புரம், நேதாஜி சாலை, மேட்டாங்கரை, கைலாச ஊருணி பகுதிகளிலும், புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட புல்வாய்க்கரை, ஆவாரங்குளம், அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூா், விநாங்கூா், எழுவணி, குண்டுகுளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

SCROLL FOR NEXT