விருதுநகர்

சிவகாசி பத்திர காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3இல் கொடியேற்றம்

DIN

சிவகாசி பத்திர காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மே 3 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து, அம்பிகை வெள்ளி சிங்க வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். அன்று இரவு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடந்து, தினசரி இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

ஐந்தாம் நாள் திருவிழாவான மே 7 ஆம் தேதி மாலை அம்பாள் வெள்ளி சிங்க வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதி உலா வந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 8 ஆம் தேதி 6ஆம் நாள் திருவிழாவின்போது, அம்பிகை வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி, வீதி உலா வந்து சிவன் சந்நிதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட கொட்டகையில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

மே 10 ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று பக்தா்கள் கோயில் முன்பாக பொங்கலிட்டு வழிபடுவா். மே 11 ஆம் தேதி கயிறு குத்து விழாவைத் தொடா்ந்து, பக்தா்கள் அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா். மறுநாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாட்டினை, கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT