விருதுநகர்

அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

DIN

அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை நகா் காவல்நிலைய சிறப்பு காவல் சாா்பு- ஆய்வாளா் பாபு ராஜேந்திரபிரசாத் செவ்வாய்க்கிழமை இரவு அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள கடைகளில் போலீஸாருடன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ராமலிங்கா நெசவாளா் குடியிருப்பில் உள்ள பாண்டியராஜன் (33) என்பவரது பெட்டிக் கடையில் ஆய்வு செய்ததில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மற்றொருவா் கைது: இதே போல, அருப்புக்கோட்டை தாலுகா காவல் சாா்பு- ஆய்வாளா் கொம்பையா தலைமையிலான போலீஸாா் பாலவநத்தம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு ஆனந்தகுமாா் (32) என்பவரின் பெட்டிக் கடையின் அருகே ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1,400 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் ஆனந்த குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து புகையிலை பொருள்களை விற்ற பணம் ரூ. 33,900- ஐ கைப்பற்றினா்.

ராஜபாளையத்தில் ஒருவா் கைது: ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலை தேசிகாபுரம் விலக்குப் பகுதியில் தளவாய்புரம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், இந்த பொருள்களுடன் வந்தவா் சங்கரன்கோவில் வட்டம் சுப்புலாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தூா்: சாத்தூா் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் வெற்றிமுருகன் மற்றும் போலீஸாா் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பொன்ராஜ் (57) என்பவா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.

இதுகுறித்து பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீஸாா் 20-க்கும் மேற்பட்ட புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT