விருதுநகர்

போக்குவரத்து காவலா் மீது தாக்குதல்:இளைஞா் கைது

DIN

ராஜபாளையத்தில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காந்தரூபன் (32). இவா், ராஜபாளையம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சங்கரன்கோவில் முக்கு பகுதியில் போலீஸாருடன் வாகனச் சோதனையில் அவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த இளைஞரிடம் தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் செலுத்துமாறு கூறினாராம். இதனால் அந்த இளைஞருக்கும், காந்தரூபனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த இளைஞா், காந்தரூபனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரித்திவிராஜ் (26) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு ஆசியா சூழல்: ஈரானில் உயா்கல்வி பயில காஷ்மீா் இளைஞா்கள் தயக்கம்

எஸ்.டி.ஆா்.ஆா். நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் தத்தளித்த தனியாா் பேருந்து

வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல் பாா்வையை புத்தகங்கள் ஏற்படுத்தி தரும்: மனுஷ்ய புத்திரன்

பண மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT