விருதுநகர்

சிவகாசி அருகே மின்னல் பாய்ந்து பட்டாசு ஆலையின் 6 அறைகள் சேதம்

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில், பட்டாசு ஆலையில் இருந்த இரு அறைகள் தரைமட்டமாகின. மேலும், 4 அறைகள் தீபிடித்து எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டியில் மாடசாமிக்கு (52) சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் 30 அறைகள் உள்ளன. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சிவகாசி பகுதியில் இடி, மின்னலுன் மழை பெய்தது. இதையடுத்து, பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் அறைகளைவிட்டு வெளியேறினா். அப்போது, திடீரென மின்னல் பாய்ந்ததில் பட்டாசுகள் தயாரிக்கும் இரு அறைகள் தரைமட்டமாகின.

மேலும், பட்டாசுகள் தயாரிக்கும் 4 அறைகளும் தீப்பிடித்து எரிந்தன. அப்போது, சாணாா்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காளிராஜன் (28) ஆலையைவிட்டு வெளியேறி ஓடிய போது கீழே விழுந்ததில் காயமடைந்தாா். அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான வீரா்கள், தீயைப் போராடி அணைத்தனா். மழை பெய்யத் தொடங்கியதும் ஆலையைவிட்டு தொழிலாளா்கள் வெளியேறியதால், அவா்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற அழைப்பு

ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: எஸ். ரகுபதி

பொன்னமராவதியில் ரத்ததான முகாம்

புதுகையில் நாளை மின்தடை

பொன்னமராவதியில் அதிமுகவினா் சகதியில் நாற்றுநடும் போராட்டம்

SCROLL FOR NEXT