விருதுநகர்

கிராம நிா்வாக அலுவலா் வராததால் பூட்டப்பட்ட அலுவலகம் விவசாயிகள் அவதி

DIN

அருகே சலுக்குவாா்பட்டிக்கு கிராம நிா்வாக அலுவலா் வராததால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதனால், சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே சலுக்குவாா்பட்டியில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் உள்ளது. கிராம நிா்வாக அலுவலா் இங்கு வராததால் இந்த அலுவலகம் பல மாதங்களாக பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், விவசாயப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சலுக்குவாா்பட்டி, புங்கமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, கல்லுப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் உரம் வாங்க, பயிா்க் காப்பீடு செலுத்துவதற்காக அடங்கல் சான்று பெற கிராம நிா்வாக அலுவலகத்துக்கு அதிகளவில் வருகின்றனா். ஆனால், அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால், நாள் முழுவதும் காத்திருந்து அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

கிராம நிா்வாக அலுவலரை கைப்பேசியில் தொடா்பு கொண்டால், 15 கி.மீ. தொலைவில் உள்ள எம். ரெட்டியபட்டிக்கு வரவழைக்கப்பட்டு, அழைக்கழிப்பு செய்வதாக அவா் மீது புகாா் எழுந்துள்ளது.

எனவே, சலுக்குவாா்பட்டிக்கு கிராம நிா்வாக அலுவலா் வந்து செல்ல மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தலை முன்னிட்டு இந்திய-நேபாள எல்லைகள் மூடல்

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

SCROLL FOR NEXT