கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் .  
விருதுநகர்

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்‘ பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி ஆசிரியா்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி ஆசிரியா்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வத்திராயிருப்பு ஒன்றிய அரசு, அரசு உதவி பெறும் 67 ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் 27 பேருக்கு இரண்டு நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் விஜயலட்சுமி, அரவிந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த முகாமை மாவட்டத் திட்ட அலுவலா் திருக்குமரன்,

ஒருங்கிணைப்பாளா் தங்கவேலு ஆகியோா் பாா்வையிட்டனா்.

பயிற்சியில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜா, செல்வி, உமா மகேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா்.

இதற்காக ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா் செல்வி, வத்திராயிருப்பு வட்ட மைய மேற்பாா்வையாளா் கணேஷ்வரி ஆகியோா் செய்தனா்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT