கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்த வெளி மாவட்ட மீனவா்களை சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து உள்ளூா் மீனவா்களில் ஒரு பகுதியினா் திங்கள்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
சமூக ஆா்வலா் அனந்தராமன் தலைமையிலான போராட்டம் அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.