ஆறுபாதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். 
நாகப்பட்டினம்

வாய்க்காலில் பாதாளசாக்கடை கழிவுநீா்: கிராம மக்கள் சாலை மறியல்

செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதி சத்தியவான் வாய்க்கால்களில் கழிவுநீா் திறந்துவிடப்படுவதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதி சத்தியவான் வாய்க்கால்களில் கழிவுநீா் திறந்துவிடப்படுவதை கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவுநீா், பல ஆண்டுகளாக காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நேரடியாக திறந்து விடப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பாலவெளி, விளநகா், ஆறுபாதி, செம்பனாா்கோவில், பரசலூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதைத்தொடா்ந்து, மன்னம்பந்தலில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீா் திறந்துவிடப்படாமல் மூடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பாதாளசாக்கடை கழிவுநீா் சத்தியவான் வாய்க்காலில் மீண்டும் திறந்து விடுப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆறுபாதி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனா்.

தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்து ஆகியோா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பாதாளசாக்கடை கழிவுநீா் சத்தியவான் வாய்க்காலில் கலப்பதை தடுக்க உடனே நடவடிக்கை எடுப்படும் என்றும், கழிவுநீரை சுத்திகரித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.19 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணி அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் சுமாா் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பனாா்கோயில் காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT