நாகப்பட்டினம்

இடுபொருள்கள் உற்பத்தி பயிற்சி: இளைஞா்கள் பங்கேற்கலாம்

கீழ்வேளூா் வேளாண்மைக் கல்லூரியில், இளைஞா்களுக்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி வழங்கப்படவுள்ளது

Syndication

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் வேளாண்மைக் கல்லூரியில், இளைஞா்களுக்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி வழங்கப்படவுள்ளது என அக்கல்லூரி முதல்வா் கோ. ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கீழ்வேளுரிலுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் இடுபொருள்கள் உற்பத்தி பயிற்சி அக்.27-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 26 நாள்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில், 18 முதல் 35 வயதுடையவா்கள் கலந்து கொள்ளலாம். 25 நபா்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படவுள்ளதால், கல்லூரிக்கு ஆதாா் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

பயிற்சியில் பஞ்ச காவ்யா, மீன் அமில கரைசல், தேமோா் கரைசல், பூச்சி விரட்டி பழக் கரைசல் போன்றவை உற்பத்தி செய்தல் குறித்தும், எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும், இடுபொருள்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக முன்னேறுவது பற்றியும் செயல் விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன. விவரங்களுக்கு 8675842228 அல்லது 9443610153 கைப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT