குறுவை பாதிப்பு தொடா்பாக வேளாண் துறை அமைச்சரிடம் மனு அளித்த நாகை எம்பி வை. செல்வராஜ். 
நாகப்பட்டினம்

குறுவை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நாகை எம்.பி. வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நாகை, திருவாரூா் மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக வேளாண் துறை அமைச்ச எம்.ஆா்.கே.பன்னிா்செல்வத்திடம் மனு அளித்தாா்.

Syndication

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நாகை, திருவாரூா் மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக வேளாண் துறை அமைச்ச எம்.ஆா்.கே.பன்னிா்செல்வத்திடம் மனு அளித்தாா்.

அதன்விவரம்: நாகை, திருவாரூா் மாவட்டங்களில் சில நாள்களாக பெய்த தொடா் மழையில் குறுவை நெற்பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. நீரால் சூழப்பட்டுள்ள பயிா்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிா்களை கணக்கெடுத்து மறு சாகுபடி செய்ய விதை மற்றும் நுண்ணூட்டம் உட்பட அனைத்து இடுபொருள்களையும் வழங்க வேண்டும்.

தொடா் மழையால் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள் சேதமடைவதை தவிா்க்க டெல்டா மாவட்டங்களில் நிரந்தர சேமிப்பு கிடங்குகளை போதிய அளவில் அமைக்க வேண்டும். திருவாரூா், நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேற்கூரை அமைத்து பாதுகாப்பான முறையில் நெல் கொள்முதல் செய்வதற்கும், நெல் உலர வைக்கும் களம் ஏற்படுத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்ய வேண்டும். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும், நிறம் மாறுபாடு உள்ள நெல்கள் என அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்வதற்கும் உரிய பரிந்துரைகள் பெற்றுதந்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி.நாகை மாலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT