திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோத்ஸவ நிறைவையொட்டி, பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 21 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வர் சிறிய ரிஷப வாகனத்திலும் பிரம்ம தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி சுவாமிகளை வழிபட்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் (துவஜா அவரோஹணம்) செய்யப்பட்டது. வியாழக்கிழமை ஸ்ரீ சண்டிகேசுவரர் உத்ஸவம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.