காரைக்கால்

அரசு பொறியியல் கல்லூரியில்  புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி நெடுங்காட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளைத்

DIN

காரைக்கால் பகுதி நெடுங்காட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், செயலர் பி.பி.கே.செல்வமணி, பொருளாளர் கே.ஆர்.காசிநாதன் ஆகியோர் வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை புதன்கிழமை சந்தித்து அளித்த மனு:
அரசு கல்வி நிறுவனமான  பெருந்தலைவர் காமராஜர் பொறியில் கல்லூரி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய பாடப் பிரிவுகளை அரசு நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. மெக்கானிக்கல், சிவில் என்ஜினியரிங் பாடப் பிரிவுகளை ஏற்படுத்தவேண்டும். உயர்கல்வித் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர், காரைக்காலில் அரசு கல்வி நிறுவனத்தை மேம்படுத்த விரைவான, சிறப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT