காரைக்கால்

உணவக மையத்தின் பூட்டைஉடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு

காரைக்கால் அருகே உணவக மையத்தின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

DIN

காரைக்கால் அருகே உணவக மையத்தின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் பகுதி நிரவி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அசைவ உணவகம் நடத்திவருபவர் அப்துல் புஹாரி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். புதன்கிழமை காலை கடை ஊழியர் ஹாஜா அலாவுதீன் கடையை திறக்கச் சென்றுள்ளார். அப்போது  பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதுகுறித்து உரிமையாளருக்கு அவர் தகவல் அளித்தார். கடைக்கு வந்து அப்துல் புஹாரி பார்த்தபோது, கடையில் பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நிரவி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வந்து கடையை பார்வையிட்டனர். கடையில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான பதிவுகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT