காரைக்கால்

ரூ.48 கோடியில் தானியங்கி துணை மின் நிலையம்

காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியில் ரூ.48 கோடியில் அமைக்கப்பட்டுவரும் தானியங்கி துணை மின் நிலையம் வரும் 2018-ஆம் ஆண்டு

DIN

காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியில் ரூ.48 கோடியில் அமைக்கப்பட்டுவரும் தானியங்கி துணை மின் நிலையம் வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என புதுச்சேரி வேளாண் மற்றும் மின் துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.
சுரக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர் பேசியது:
காரைக்காலில் கண்காணிப்புப் பொறியாளர் நிலை 1, 2, 3 என்ற வகையில் பதவிகளை நிரப்புவதற்கு பணிகள் நடந்துவருகின்றன. காரைக்காலுக்கு சுமார் 65 மெகாவாட் மின்சாரம் தேவையென்ற நிலையில், 30 மெகாவாட் புதுச்சேரி மின்திறல் குழுமத்திலிருந்தும், 35 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமும் பெறப்படுகிறது.
காரைக்காலில் நிறைவான தொழில்மயமாக்கல், நிலையான, நம்பகமான மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.48 கோடியில், புதிதாக 230 கிலோ வாட் தானியங்கி துணை மின் நிலையம் மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து நேரடியாக காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவாசலில் மின்சாரத்தை பெறும் மேல்நிலை பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டப்பணி வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
 நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், மின் துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால், உதவி பொறியாளர்கள் சத்யநாராயணா, ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT