காரைக்கால்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைப் பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன தலைவர் எம்.எல். ஜெய்சிங் தலைமை வகித்தார்.
7 -ஆவது ஊதியக் குழுவின் ஊழியர்களுக்கு எதிரான பரிந்துரைகளை மாற்ற வேண்டும். மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டபடி ஊதிய உயர்வுக்கான உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை 26,000 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வீட்டு வாடகைப்படியை பழைய விகிதமான 30%, 20%, 10% -ஆக வழங்க வேண்டும். உள்ளாட்சித்துறை, தன்னாட்சி, கூட்டுறவு, அரசு உதவிப்  பெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் 7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய ஊதியத்தை வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படியை காரைக்கால் பகுதி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கான உச்சவரம்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்மேளன கெளரவத் தலைவர் எம். ஜார்ஜ், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் ஐயப்பன், சம்மேளன பொதுச் செயலர் பி.வி. சுப்ரமணியன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலர்  ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர்
காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT