காரைக்கால்

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான வீரருக்கு காரைக்கால் துறைமுகம் நிதியுதவி

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வீரருக்கு, காரைக்கால் துறைமுகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

DIN

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வீரருக்கு, காரைக்கால் துறைமுகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம், காடம்பாடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மாதேஸ்வரன். இவர், தென்னாப்பிரிக்காவில் செப். 10 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் சார்பில் 66 கிலோ எடைப் பிரிவு வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்க செல்லும் வீரர் செலவுக்காக நிதியுதவி செய்யுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கடந்த ஆக. 16-ஆம் தேதியிட்ட கடிதத்தில் துறைமுக நிர்வாகத்தைக் கேட்டிருந்தார். துறைமுக நிர்வாகம் வீரரின் செலவுக்காக ரூ. ஒரு லட்சம் தருவதற்கு முடிவெடுத்து, தொகைக்கான காசோலையை நாகை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரனிடம், காரைக்கால் துறைமுக பொது மேலாளர் ஜி. ராஜேஷ்வர் ரெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கினார். அப்போது, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள மாதேஸ்வரன், அவரது தந்தை பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT