காரைக்காலில் மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாநில முதல்வர், மத்திய அமைச்சர், சவூதி அரேபியாவுக்கான இந்திய தூதர், ஜார்க்கண்ட் மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்தவர் காரைக்காலைச் சேர்ந்த எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது 80-ஆவது பிறந்த நாள் விழா காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்ட பாரூக் மரைக்காயர் உருவப் படத்துக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில், மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநில பொதுச் செயலர்கள் ஏ. மாரிமுத்து, எம்.ஓ.எச்.யு. பஷீர், மாநில செயலர் மோகனவேலு, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.பி. சந்திரமோகன், செல்வமணி, மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ். கருணாநிதி, டி. பிரபு, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் மற்றும் பாரூக் மரைக்காயர் சிலை அமைப்புக் குழு பொறுப்பாளர் பி.ஜி. சோமு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின்போது, பாரூக் மரைக்காயரின் பெருமைகளை கட்சியினர் விளக்கிப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.