காரைக்கால்

காரைக்காலில் இருந்து புதுச்சேரி புறப்பட்டனர் கடல் சாகசப் பயணக் குழுவினர்

DIN

புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு கடல் வழியாக படகில் வந்த என்.சி.சி. மாணவ மாணவிகள் ஜூலை 19-ஆம் தேதி புதுச்சேரி சென்றடையும் திட்டத்தில் காரைக்காலில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டனர். 
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் இயக்ககத்தின்கீழ் இயக்கும் புதுச்சேரி என்.சி.சி. குழுமமானது, தமது மாணவர்களுடன் சமுத்திரகமி என்ற கடல் சாகசப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தது. படகு மூலம் புதுச்சேரியில் புறப்பட்டு கடலூர், பரங்கிப்பேட்டை, பழையாறு, பூம்புகார் வழியே காரைக்கால் செல்ல முடிவு செய்து ஜூலை 9-ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து புறப்பட்டனர். இக்குழுவில் கல்லூரி மாணவ மாணவிகள் 60 பேர் பங்கேற்றனர். இவர்களில் 25 பேர் மாணவிகள். புதுச்சேரியில் இக்குழுவினரின் பயணத்தை வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். 
காரைக்கால் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இக்குழுவினர் வந்துசேர்ந்தனர். இக்குழுவினர் மீண்டும் புதுச்சேரிக்கு செல்லும் வகையில் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டனர். இவர்களது பயணத்தை சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசும்போது, சாதனை நிகழ்த்துவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துக்காட்டும் வகையில் கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பலரும் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றன. இவர்கள் பாதுகாப்பான முறையில் இலக்கை அடைய வேண்டும் என்றார். 
இதுகுறித்து என்.சி.சி. அதிகாரிகள் கூறியது: கடல் சாகசம், பயணம் குறித்து என்.சி.சி. மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. கப்பல் படை கமாண்டர் தினகரன் தலைமையில் இந்த கடல் சாகசப் பயணம் புதுச்சேரியில் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கியது.  பயணத்தின்போது கரையில் இறங்கி, அந்த பகுதி மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்றுகள் நடப்பட்டன. கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காத வகையில் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கவேண்டியன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த பயணத்தில் உள்ள மாணவர்களுக்கு கடல் குறித்து புரிதல் ஏற்படுகிறது. மனதில் சாதிக்க முடியும் என்ற தைரியம் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நோக்கில் இந்த பயணம் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தனர். 
சாகசப் பயணத்தில் 27  டி.கே  வேல் என்கிற 3 பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். கடற்படை அதிகாரி ஒருவரும், என்.சி.சி. அதிகாரிகள் இருவரும், கடற்படை பயிற்சியாளர்கள் 6 பேரும் என இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். 19 -ஆம் தேதி புதுச்சேரிக்கு சென்றடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் காரைக்கால் துறைமுக உதவி துணைத் தலைவர் ராஜேஷ்வர்ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT