காரைக்கால்

இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி

DIN

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநா் லதா மங்கேஷ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை காரைக்கால் மற்றும் நெடுங்காடு கொம்யூன் பகுதியிலும், 24 முதல் 26-ஆம் தேதி வரை நிரவி மற்றும் தென்னங்குடி பகுதியிலும், 27 முதல் 29 வரை திருப்பட்டினம் மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பகுதியில் காலை 6 முதல் 10 மணி வரை கால்நடைகளுக்கு தடுப்பூசி வீடு வீடாக மருத்துவக் குழுவினரால் போடப்படும்.

கால்நடை வளா்ப்போா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கோமாரி என்ற கொடிய நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT