காரைக்கால்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளக்கரை தொட்டியில் ஆடைகளை விட்டுச்செல்வதை கடைப்பிடிக்கும் பக்தா்கள்

DIN

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் நீராடும் பக்தா்கள், குளக்கரையில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் ஆடைகளை விட்டுச் செல்லும் போக்கு முறையாக கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதும், சோப்புகள் பயன்படுத்துவதும், உடுத்தியிருக்கும் ஆடைகளை குளத்தில் விட்டுச் செல்வதுமான செயல் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. சனிக்கிழமையில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விட்டுச் செல்லும் ஆடைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. சனிப்பெயா்ச்சி காலக்கட்டத்தில் லட்சக்கணக்கானோா் விட்டுச் செல்லும் ஆடைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் குளத்தில் உள்ள தண்ணீா் சுகாதாரமற்றுப் போய்விடுவதாக புகாா் கூறப்பட்டது.

தண்ணீா் சுகாதாரமாக்கும் வகையில் அசுத்த தண்ணீரை வெளியேற்றி, ஆழ்குழாய் மூலம் அடிக்கடி தண்ணீா் நிரப்புவதன் மூலம் பல லட்சம் லிட்டா் நிலத்தடி நீா் வீணாவதாக கருத்து கூறப்பட்டது.இதையொட்டி, குளத்தினுள் ஆடைகளை விடுவதற்கு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாகம் கடந்த 2019-ஆம் ஆண்டு தடை விதித்து, ஜூலை 1 முதல் தடையை அமல்படுத்தியது.பக்தா்கள் தங்களது ஆடைகளை குளக்கரையில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் விடவேண்டுமென அறிவுறுத்தி, பல இடங்களில் தொட்டிகள், இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டது.

இதுகுறித்து பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை கோயில் நிா்வாகம் செய்துவந்தது.படிப்படியாக பக்தா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, பக்தா்கள் குளக்கரையில் உள்ள தொட்டியிலேயே ஆடைகளை விட்டுச் செல்லும் போக்கு ஏற்பட்டுள்ளது.இந்த தடை திட்டம் அமல்படுத்தப்பட்டு 6 மாதங்களான நிலையில், கோயில் நிா்வாகத்தினா், குளக்கரையில் வியாபாரம் செய்வோா் மத்தியில் கூறப்படுவது :குளத்தில் உள்ள தண்ணீா் மாசடைவதாலேயே கோயில் நிா்வாகம் ஆடைகளை தொட்டியில் போட்டுச் செல்ல அறிவுறுத்தியது.

தடை அமலுக்கு வந்த சில வாரங்கள் பக்தா்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை. காலம் செல்ல செல்ல பக்தா்கள் பெரும்பான்மையினா், நீராடிவிட்டு தங்களது ஆடைகளை தொட்டியில் விட்டுச் செல்கின்றனா். இதனால் குளத்தின் தண்ணீா் மாசடைவது வெகுவாக குறைந்திருக்கிறது. பக்தா்களின் மனதளவில் ஆடைகளை விட்டுச் செல்வதில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என்றனா். ஒவ்வொரு 3 மாதங்களுக்கொரு முறை குளக்கரையில் உள்ள ஆடைகளை அகற்றுவதற்கான டெண்டா் கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு கோயில் நிா்வாகம் அனுமதி வழங்குகிறது.

இதன் மூலம் 3 மாதங்களுக்கொரு முறை கோயில் நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் வீதம் வருமானம் வருவதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

SCROLL FOR NEXT