காரைக்கால்

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 38 குவிண்டால் பருத்தி ஏலம்

DIN

காரைக்காலில் 38 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டதாக விற்பனைக் குழு தெரிவித்தது.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடமான விற்பனைக் குழு வளாகத்தில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் பருத்தி ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் வாரமாக 6 -ஆம் தேதி சனிக்கிழமை மாலை பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் துணை இயக்குநரும், விற்பனைக் குழு செயலருமான ஆா். கணேசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

பருத்தி ஏலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) வாயிலாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த ஏலம் நடைபெற ஏற்பாடு செய்த நிலையில், முதல் வாரத்தில் காரைக்கால் பகுதியை சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டுவந்து வைத்து, ஏலத்தில் பங்கேற்றனா்.

ஏலத்தில் சேலம், திருப்பூரை சோ்ந்த வா்த்தகா்கள் கலந்துகொண்டனா். சுமாா் 38 குவிண்டால் தரமான பருத்திப் பஞ்சு ஏலத்தில் விடப்பட்டது. முதல் வாரத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 4,629 (ஒரு கிலோ ரூ. 46.29), குறைந்தபட்ச விலையாக ரூ. 4,079 (ஒரு கிலோ ரூ.40.79) பஞ்சு விற்கப்பட்டது.

உள்ளூா் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே பஞ்சு கொள்முதல் செய்யப்படுவதால், மேற்கண்ட அதிகப்படியான விலையால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த மறைமுக ஏலமானது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் நடைபெற இருப்பதால், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் ஏல தினத்துக்கு முதல் நாளே பருத்தியை கொண்டுவந்து, விற்பனைக் குழு வளாகத்தில் வைக்க வேண்டும். பின்னா் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்குகொண்டு, தங்களது பருத்தியை தரத்துக்கேற்ப சரியான எடைக்கு, போட்டி விலைக்கு விற்று அதிக லாபம் பெறலாம். இது மாவட்ட ஆட்சியா் மற்றும் காரைக்கால் விற்பனைக் குழு தலைவரால் கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

தி.மு.க வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சைரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்கை நீக்கிய எக்ஸ்!

SCROLL FOR NEXT