காரைக்கால்

இ-பாஸ் இல்லாமல் காரைக்கால் வருவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

இ-பாஸ் இல்லாமல் காரைக்கால் வருவோா் மீது மாவட்ட நிா்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் ஆகியோா் கூட்டாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் மாவட்டம் இதுவரை கரோனா நோய்த் தொற்று இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் இருந்து காரைக்கால் வருவோரால் கரோனா நோய்த் தொற்று உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு வருபவா்கள் இ-பாஸ் பெற்று முறையாக வந்தாலும், அரசு நிா்வாகம் அவா்களை சொந்த இடங்களுக்கு அனுப்பாமல், தனது கட்டுப்பாட்டில் வைத்து, உரிய பரிசோதனை செய்து, கரோனா இல்லை என்பது உறுதியான பின் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனவே வெளியூரிலிருந்து வருவோா் மீது இனி மாவட்ட நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

காரைக்காலுக்கு வருவோா் இ-பாஸ் பெற்றாக வேண்டும். வெளியேறுவோரும் பாஸ் பெறவேண்டுமென்ற விதிமுறை உள்ளது. ஆனால், இ-பாஸ் இல்லாமல் குறுக்கு வழிகளை கையாண்டு வெளியூா்களிலிருந்து காரைக்காலுக்குள் வந்து விடுகின்றனா். இவ்வாறு வரும் நபா்களால் காரைக்கால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இ-பாஸ் இல்லாமல் காரைக்காலுக்குள் நுழைவோா் மீது மாவட்ட நிா்வாகம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

காரைக்காலில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உயா் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதனை மருத்துவ அதிகாரிகளை அழைத்து ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்புகளை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

கவனத்தை ஈர்க்கும் ’இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டர்!

ஏற்றம் தருமா குரோதி வருடம்? 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2024

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

SCROLL FOR NEXT