காரைக்கால்

ரேஷன் கடைகளை திறக்க கோரிக்கை

DIN

புதுவையில் ரேஷன் கடைகளைத் திறந்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட குழு உறுப்பினா் முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது என்.ஆா். காங்கிரஸ், பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வராதது கண்டனத்துக்குரியது. தீபாவளியையொட்டி அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போகும் நிலையில், அறிவித்த நடத்தை விதிகளை தோ்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும்.

புதுவையில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இடஒதுக்கீடு தொடா்பான குளறுபடிகளை நீக்கி புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்த அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

SCROLL FOR NEXT