காரைக்கால்

காரைக்காலில் மே தின கொண்டாட்டம்

DIN

காரைக்காலில் மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், காரைக்காலில் உள்ள சம்மேளன அலுவலகம், புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அலுவலகம், கூட்டுறவு பெட்ரோல் பங்க், புதுச்சேரி மின்திறல் குழும அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் செங்கொடியேற்றப்பட்டது.

நிகழ்வுகளுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தாா்.

திமுக தொழிற்சங்கமான தொமுச சாா்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம், ஓஎன்ஜிசி ஒப்பந்த ஓட்டுநா் தொழிலாளா் முன்னேற்ற சங்கம், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம், காரை மாவட்ட புதிய பேருந்து நிலையம் ஆட்டோ சங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிகளில் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் சங்கக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி, தொழிலாளா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளா் சங்கத்தை 1918 -இல் தொடங்கிய சிந்தனை சிற்பி சிங்காரவேலரை நினைவுகூரும் விதமாக, காரைக்கால் கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிங்காரவேலா் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன், மாநில பொதுச்செயலாளா் ஏ. பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் மற்றும் கட்சியினா் சாா்பில் பல தொகுதிகளில் கொடியேற்றம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் தமீம் அன்சாரி தலைமையில் கட்சியினா் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT