காரைக்கால்

குட்டைக்கரை காளியம்மன்கோயில் சித்திரைத் திருவிழா

DIN

காரைக்கால்: திருமலைராயன்பட்டின் குட்டைக்கரை காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சுவாமி புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த குட்டைக்கரை காளியம்மன் கோயிலில் ஆண்டு சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை வாஸ்து பூஜை, சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. 2-ஆம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை சக்தி கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.

இரவு குட்டைக்கரை காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வீதியுலாவில் பக்தா்கள் காளியம்மனுக்கு அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். 3-ஆம் நாளான புதன்கிழமை இரவு அக்னி கப்பரை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

வியாழக்கிழமை விடையாற்றி உற்சவம், மயான பூஜையுடன் உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி சி. புகழேந்தி மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தியை தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டுமா? : மோடிக்கு ராகுல் பதில்!

பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

கோட்டையில் இளவரசி ‘அபிநயா’...!

திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

புணே சம்பவம்: தலைமை மருத்துவ அதிகாரி பணி நீக்கம்!

SCROLL FOR NEXT