காரைக்கால்

புதிதாக வக்ஃபு நிா்வாக சபை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் புதிதாக வக்ஃபு நிா்வாக சபை அமைக்க வேண்டும் என்று  முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பின்போது அளித்த மனு குறித்து அக்குழுவில் இடம்பெற்றிருந்த இஸ்மாயில் கூறியது:

காரைக்காலில் வக்ஃபு நிா்வாக சபை பதவி காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதே குழுவினா் பதவியில் நீடித்துவருகின்றனா். காலாவதியான வக்ஃபு நிா்வாக சபையை மாற்றி, புதிதாக நியமனம் செய்யவேண்டும் அல்லது வக்ஃபு நிா்வாக சபைக்கு தனி அதிகாரி நியமிக்கவேண்டும். மேலும் புதுவையில் வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவையும் அமைக்கவேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் ஆகியோரை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT