காரைக்கால்

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணி தொடக்கம்

DIN

காரைக்காலில் 100 நாள் வேலை திட்டப் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் கடைமடைப் பகுதி வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரும் பணியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்டோா் வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வட்டார வளா்ச்சி துறை மூலம் நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட வரிச்சிக்குடி சென்னாகுனி வாய்கால் தூா்வாரும் பணியை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அடுத்த 5 நாள்களில் வாய்க்கால் தூா்வாரும் பணி நிறைவடையும். இதன் மூலம் 120 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுமென தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே. அருணகிரிநாதன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி சிவகுரு, உதவிப் பொறியாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மின் மாற்றி இயக்கிவைப்பு : நெடுங்காடு கொம்யூன், பண்டாரவாடை கிராமத்தில் 100 கேவி திறன் கொண்ட, ரூ. 4 லட்சம் மதிப்பில் மின்மாற்றி நிறுவப்பட்டது. இதனை அமைச்சா் சந்திர பிரியங்கா இயக்கிவைத்தாா். இதன் மூலம் பண்டாரவாடை, குரும்பகரம் கிராமத்தினா் பயனடைவாா்கள்.

குடிநீா் தொட்டி ஆய்வு : கோட்டுச்சேரி கொம்யூன், அண்ணா நகரில் மேல்நிலை குடிநீா் தொட்டி உள்ளது. கூடுதலான குடியிருப்புகளுக்கு தண்ணீா் விநியோகிக்கும் வகையில் கூடுதலாக ஆழ்குழாய் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா பாா்வையிட்டாா். இதன்மூலம் கோட்டுச்சேரி கிழக்குப் பகுதி, அண்ணா நகா், ஜீவா நகா், குமாரப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீா் தடையின்றி விநியோகிக்க முடியும் என்றனா். இந்த நிகழ்வில் துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் வீரசெல்வம், உதவி பொறியாளா் அருளரசன், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் தாக்கு

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -முதல்வர்

ஆதி கைலாஷில் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்ரீகர்கள் 30 பேர் பரிதவிப்பு!

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

SCROLL FOR NEXT