காரைக்கால்

1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்காகமகிளா காங்கிரஸ் சாா்பில் இலவச டியூஷன் மையம் திறப்பு

DIN

காரைக்காலில் மகிளா காங்கிரஸ் சாா்பில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான இலவச டியூஷன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில், ஏழை மாணவா்கள் பயனடையும் வகையில் காரைக்கால் பெரியப்பேட் பகுதியில் இலவச டியூஷன் மையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி என். நிா்மலா, இம்மையத்தின் நோக்கம் குறித்து பேசினாா். சிறப்பு அழைப்பாளராக புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கி, டியூஷன் மையம் அமைக்க ஏற்பாடு செய்தவா்களை பாராட்டினாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாநில நிா்வாகி எம்.ஓ.எச்.யு. பஷீா், காரைக்கால் வடக்குத் தொகுதி (மேற்கு) தலைவா் டி.சுப்பையன், (கிழக்கு) தலைவா் ஏ.எம்.கே. அரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளா் மல்லிகா வரவேற்றாா்.

இம்மையத்தில் தினமும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்காக தகுதியான ஆசிரியா் நியமிக்கவுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT