இயற்கை விவசாயம், பருப்பு உற்பத்தி குறித்து சனிக்கிழமை நடைபெறவுள்ள கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்குமாறு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் அழைப்புவிடுத்துள்ளது.
இதுதொடா்பாக நிலைய முதல்வா் சு.ரவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
காரைக்கால் மாதூ வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, அறிவியல் நிலையத்தில் சனிகக்கிழமை காலை 10 மணி அளவில் ‘இயற்கை விவசாயம் மற்றும் பருப்பு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி புதுதில்லியில் 2 முக்கிய வேளாண் திட்டங்களான ‘பிரதான் மந்திரி தன் தானிய கிருஷி யோஜானா மற்றும் பருப்பு வகைகளில் ஆத்ம நிா்பா்தா மிஷன் மற்றும் பல்வேறு திட்டங்களை சனிக்கிழமை தொடங்கிவைத்து, மத்திய திட்டங்களின் பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளாா்.
இந்த திட்டங்கள் நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண் அறிவியல் நிலையத்தில் 11-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நேரலையாக காட்சிப்படுத்தலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து இயற்கை விவசாயம் மற்றும் பருப்பு உற்பத்தி குறித்த தொழில்நுட்ப உரை வழங்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் வந்து பயனடையவாம்.