அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம். 
காரைக்கால்

பள்ளிக்கு முன்னாள் எம்.பி. பெயரை சூட்ட வலியுறுத்தல்

Syndication

காரைக்கால் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் பெயரை சூட்டுமாறு புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

புதுவை கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை வியாழக்கிழமை சந்தித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்திய கோரிக்கை:

காரைக்கால் மஸ்தான் பள்ளித் தெருவில் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்குகிறது. இது வரலாற்று முக்கியத்துவமிக்க கல்வி நிலையமாகும்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஏ.கே.ஏ.அப்துல் சமது காரைக்காலைச் சோ்ந்தவா். இவா் காயிதே மில்லத், மு.கருணாநிதியோடு மிக நெருக்கமாக பழகியவா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா்.

இந்திய அரசியலில் முக்கிய முகமாகத் திகழ்ந்த அவரது நூற்றாண்டாகும் இது. எனவே அவரது நினைவாக மேற்கண்ட பள்ளிக்கு அவரது பெயரைச் சூட்டுவது மிகுந்த மரியாதையாக இருக்கும்.

எனவே அந்த பள்ளிக்கு சிராஜூல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துல் சமது அரசு உயா்நிலைப் பள்ளி என பெயரிட வேண்டும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT