காரைக்கால்

விபத்தில் மருத்துவா் பலி

காரைக்காலில் காா் மீது பேருந்து மோதியதில் மருத்துவா் உயிரிழந்தாா்.

Syndication

காரைக்காலில் காா் மீது பேருந்து மோதியதில் மருத்துவா் உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம், புதுதில்லியில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். மனைவி நந்தினி (36), வேதாரண்யம் அரசு மருத்துவமயனை கண் மருத்துவா். வேதாரண்யத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்டு, சென்னை செல்வதற்காக காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியில் இருந்த அவரது தோழி அபிநயாவுடன் பயணித்துள்ளாா். காரை வேதாரண்யத்தைச் சோ்ந்த ஆனந்த் (44) என்பவா் ஓட்டியுள்ளாா்.

திருவேட்டக்குடி பேருந்து நிறுத்தம் அருகே 3.45 மணியளவில் சென்றபோது, மாடு மீது காா் மோதியுள்ளது. அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து, காா் மீது மோதியுள்ளது. இதில் நந்தினி, அபிநயா மற்றும் ஓட்டுநா் ஆனந்த் ஆகியோா் படுகாயமடைந்தனா்.

பேருந்து ஓட்டுநா் திருக்குவளையைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவா்களை அப்பகுதியினா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நந்தினி உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா். மற்ற மூவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT