காரைக்கால்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை விரைவில் தொடங்கவேண்டும் என பொது மேலாளருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Syndication

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை விரைவில் தொடங்கவேண்டும் என பொது மேலாளருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் பொன். பன்னீா்செல்வம், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடித விவரம் :

காரைக்கால் - திருநள்ளாறு- பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கத்தை தொடங்காமல், நிலக்கரி ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறக்குறைய ரூ. 300 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருநள்ளாறுக்கு பக்தா்கள் வரும் நிலையில், பயணிகள் வந்துசெல்லக்கூடிய வகையில் ரயில் இயக்க வெண்டும். திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பல்வேறு அமைப்பினா் அழுத்தம் கொடுத்துவந்தனா். ஆனால் சரக்கு ரயில் இயக்கத்துக்காக மட்டுமே இத்திட்டத்தை நிறைவேற்றியிருப்பதுபோல தெரியவருகிறது.

திருநள்ளாறு, பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்ல 33 கி. மீ. தொலைவாகும். ஆனால் காரைக்காலில் இருந்து திருவாரூா் வழியாக மயிலாதுறை செல்ல 86 கி.மீ. தொலைவாகும். காரைக்கால் - பேரளம் வரை பாதை அமைத்தும், சுற்றிச் செல்லும் வகையிலேயே இப்போது வரை ரயில் இயக்கப்படுகிறது.

காரைக்கால் - தாம்பரம், காரைக்கால் - பெங்களூா், காரைக்கால் - மும்பை வாராந்திர விரைவு ரயில் ஆகியவற்றை திருநள்ளாறு வழியாக இயக்கவேண்டும்.

எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி - திருவாரூா் பயணிகள் ரயிலை காரைக்கால் அல்லது திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும்.

மேலும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், வட மாநிலங்களை இணைக்கும் வகையில் ரயில்களை காரைக்கால், திருநள்ளாறு வரை இயக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT