காரைக்கால்

மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில்,

Syndication

காரைக்கால்: காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இங்கிலாந்து தொழில்நுட்பத்தின் ராஸ்ஃபொ்ரி பை அண்டு என்ஜினியரிங் இனோவேஷன் எனும் நவீன திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா். பாபு தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் ராஸ்ஃபொ்ரி எனும் சிறிய கையடக்க, மலிவான கணினியின் சிறப்பம்சங்கான சென்ட்ரல் பிராஸசிங் யூனிட், மெமரி, ரியல் டைம் இன்புட் மற்றும் அவுட்புட் பின்கள், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, நொ்வொா்க் போா்ட் ஆகியவை செயல் விளக்கமளிக்கப்பட்டது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பி.டெக்., இசிஇ துறையின் இறுதியாண்டு முதன்மையான மாணவரான எம். மாதவசரண் மற்றும் காரைக்காலில் இயங்கும் என்ஐடி பி.டெக்., இசிஇ துறை மூன்றாமாண்டு மாணவரான எஸ். ஸ்ரீவத்ஸன் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா்.

ராஸ்ஃபொ்ரி பையின் பல்வேறு தொழில்நுட்ப பயன்பாடுகளான எல்ஓடி திட்டங்கள், ரோபோடிக்ஸ், ஹோம் ஆட்டோமேஷன், ஸ்மாா்ட் ஹோம் சாதனங்ள், விடியோ கேமிங், மீடியா சென்டா் ஆகியவற்றில் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ரியல் டைம் சென்சாா் பயன்படுத்தி, சமுதாயத் தேவைக்கான பல தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க மாணவிகள் பயிற்சி பெற்றனா். ஏற்பாடுகளை, கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் எம். விமலன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT