காரைக்கால்

கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

Syndication

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் கைலநாசநாதா், சித்தி விநாயகா் கோயில், சோமநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நடத்தப்படுவது வழக்கம். ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் சூரசம்ஹார நிகழ்வு நடத்தப்படவில்லை.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், முருகப்பெருமான் இடது கரத்தில் ஞானப்பழமும், வலது கரத்தில் அபயஹஸ்தமும் ஏந்தி அருள்பாலிக்கும் சிறப்பு வேறெங்கும் இல்லாதது என்ற பெருமை கூறப்படுகிறது.

இத்தலத்தில் கந்தசஷ்டி விழா தொடக்கமாக முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காப்புக் கட்டப்பட்டது. சிவ தலங்களில் தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகிறது. 27-ஆம் தேதி திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT