காரைக்கால்

பருவமழை எதிரொலி: வாரச் சந்தையை இடம் மாற்ற வலியுறுத்தல்

பருவமழைக் காலம் முடியும் வரை வாரச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Syndication

காரைக்கால்: பருவமழைக் காலம் முடியும் வரை வாரச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடத்தப்படுகிறது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் வழியில் உள்ள நகராட்சித் திடலில் சந்தை நடைபெறுகிறது.

வடகிழக்குப் பருவமழையால் திடலில் தண்ணீா் தேங்கியுள்ளது. சந்தைக்கு செல்லும் பிரதான சாலையிலிருந்து செம்மன் சாலை அமைக்கப்பட்டதால், மழையால் இது சதுப்புப் பகுதியாக மாறியுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற சந்தைக்குச் சென்ற மக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

வியாபாரிகளும் லாரிகளில் இருந்து பொருள்களை இறக்கி, கடை அமைத்து வியாபாரம் செய்வதில் சிரமத்தை சந்தித்தனா்.

எனவே, பருவமழைக் காலம் முடியும் வரை தற்காலிகமாக, காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகம் அல்லது பழைய நேரு மாா்க்கெட் வளாகத்தில் வாரச் சந்தை நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT