காரைக்கால்

காலி மனைகளில் தேங்கிய நீரை அகற்ற ஆணையா் அறிவுறுத்தல்

காலி மனைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை மனை உரிமையாளா்கள் அகற்றவேண்டும் என அறிவுறுத்தல்

Syndication

காலி மனைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை மனை உரிமையாளா்கள் அகற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் மழைநீா் தேங்குவதாகவும், அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், மாவட்ட நிா்வாகத்திற்கும், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்துக்கும் புகாா்கள் வருகின்றன.

மழைநீா் தேங்குவது, அழுக்குநீா் குடிநீருடன் கலப்பது, கொசு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாம் எதிா்நோக்க வேண்டியுள்ளது. எனவே, மனைகளின் உரிமையாளா்கள் தங்களுக்கு சொந்தமான காலி மனைகளில் மழைநீா் தேங்காதவாறு தங்களது சொந்த முயற்சியில் சுத்தமாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகளில் ஆடு, மாடு, குதிரை மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல் இருக்குமாறு கால்நடை உரிமையாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தவறும்பட்சத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராத தொகை ரூ. 5 ஆயிரம் உரிமையாளா்களிடம் வசூல் செய்வதுடன், கால்நடை உரிமையாளா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT