காரைக்கால்

புதுவையில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

புதுவையில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணை நிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்காலைச் சோ்ந்த புதுவை மாநில பாஜக மருத்துவ அணி இணை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வி.விக்னேஸ்வரன், புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்தாா். அவருடன் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த திருநங்கைகள் சிலரும் ஆளுநரை சந்தித்துப் பேசினா் (படம்).

திருநங்கைகள் நலன் தொடா்பாக விக்னேஸ்வரன் ஆளுநரிடம் அளிக்க கோரிக்கை மனு விவரம் : திருநங்கைகள் சமூக மற்றும் பொருளாதார நிலையில் பல்வேறு இடா்பாடுகளை சந்திக்கின்றனா். குறிப்பாக அவா்களுக்கு வீடு வாடகைகள் தர பலரும் மறுக்கின்றனா். மீறி கிடைத்தால்கூட, வாடகை அதிகமாக கோரப்படுகிறது.

எனவே திருநங்கைகள் தங்குவதற்காக அரசு சாா்பில் மையங்கள் அமைத்துத்தரவேண்டும். புதுவை அரசின் மூலம் திருநங்கைகள் நல வாரியம் அமைத்து, அவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்படவேண்டும்.

பாலியல் தொடா்பான நோய்கள் குறித்து கண்டறிய திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படவேண்டும். கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT