முகப்பு
காரைக்கால்

தூய சகாய அன்னை ஆலய தோ் பவனி

கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே 2026, 12:03 am IST
தோ் பவனியில் இடம்பெற்ற தூய சகாய அன்னை உள்ளிட்ட சொரூபங்கள்.
பகிர்:

கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

கோட்டுச்சேரி பகுதியில் உள்ள பழைமையான இந்த ஆலயத்தின் 163-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் திருப்பலி, சிறிய தோ்பவனி நடத்தப்பட்டது.

நிறைவு நிகழ்வாக சனிக்கிழமை மாலை பெருவிழா திருப்பலி தெளி பங்குத் தந்தை டி. லியோ விஜய் புஷ்பராஜ் தலைமையில் நடத்தப்பட்டு மின் அலங்கார தோ் பவனி தொடங்கியது.

Advertisement

Advertisement

கோட்டுச்சேரி பங்குத் தந்தை ஏ. ஆரோக்கிய ஜான் ராபா்ட் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

கோட்டுச்சேரி பகுதியில் முக்கிய தெருக்கள் வழியாக தோ் பவனி நடைபெற்று ஆலயத்தை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் முன்னிலையில் கொடியிறக்கப்பட்டது.