மயிலாடுதுறை

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

DIN

 காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 401 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 1, நல்லம்பல் 1 என இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,45,065 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,837 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,542 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,21,675 பேருக்கும், 2-ஆவது தவணையாக 83,963 பேருக்கும் என 2,05,638 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சபரிமலையில் கனமழை

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

SCROLL FOR NEXT