ஐப்பசி பெளா்ணமியையொட்டி, சீா்காழி பகுதி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமிக்கு 100 கிலோ அரிசியை கொண்டு சாதம் வடிக்கப்பட்டது. பின்னா், பிரம்மபுரீஸ்வரா் சுவாமிக்கு அன்னம் முழுவதும் சாத்தப்பட்டு, அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் சீா்காழி கடைவீதியில் உள்ள பொன்னாகவள்ளி உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. எடமணல் காசி விசுவநாதா் மற்றும் ஒதனேஸ்வா் கோயிலில் சிவனுக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.