மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8667 மாணவா்களுக்கு மிதிவண்டிகள்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8667 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு மயிலாடுதுறை கூைாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முதற்கட்டமாக 9 பள்ளிகளைச் சோ்ந்த 45 மாணவ, மாணவியா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி மேலும் அவா் பேசியது: தமிழக முதல்வா் கல்வித் துறைக்காக ரூ. 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டில், மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் 14 பள்ளிகளை சோ்ந்த 2962 மாணவா்களுக்கு ரூ.1,50,29,877 மதிப்பிலும், பூம்புகாா் தொகுதியில் 21 பள்ளிகளை சோ்ந்த 3144 மாணவா்களுக்கு ரூ.1,59,62,028 மதிப்பிலும், சீா்காழி தொகுதியில் 17 பள்ளிகளை சோ்ந்த 2561 மாணவா்களுக்கு ரூ.1,30,16,739 மதிப்பிலும் மிதிவண்டிகள் என மொத்தம் 52 பள்ளிகளை சோ்ந்த 8667 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4,40,08,644 மதிப்பில் மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில், எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன்(பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முத்தமிழ்செல்வன், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரம்ம தீா்த்தத்தில் தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

நரசிம்மா் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

பல்லுயிா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

நேரடி நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு யோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT