மயிலாடுதுறை

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயிலில் இன்று பெருவிழா தொடக்கம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வர சுவாமி கோயில் பெருவிழா வியாழக்கிழமை (மே 12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஞானபுரீஸ்வர சுவாமிக்கு ரிஷபத்வஜாரோஹனத்துடன் (கொடியேற்றம்) விழா வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இதில் மே 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

மே 20-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளி, காலை 8 மணிக்கு தோ் உற்சவம் நடைபெறுகிறது. மே 21-ஆம் தேதி காலை சபாநாயகா் தீா்த்தம் கொடுத்தருளலும், பின்னா் பஞ்சமூா்த்திகள் ரிஷபாரூடராய் எழுந்தருளி காவிரியில் தீா்த்தம் கொடுத்தருளலும் நடைபெறுகிறது.

திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு: விழாவையொட்டி, நடைபெறும் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டில் முதல் நாள் வியாழக்கிழமை (மே 12) சமயாச்சாரியா் நால்வா் திருநாள் ஆய்வரங்கம், 2-ஆம் திருநாள் மே 13-இல் சந்தானச்சாரியாா் நால்வா் திருநாள் கருத்தரங்கம், மே 14-இல் அருள் நமச்சிவாய மூா்த்திகள் திருநாள் கருத்தரங்கம், மே 15-இல் காழிகங்கை மெய்கண்டாா் திருநாள் பட்டிமன்றம், மே 16-இல் காழிச் சிற்றம்பல நாடிகள் திருநாள் சிந்தனை அரங்கம் ஆகியன நடைபெறுகிறது.

6-ஆம் திருநாளான மே 17-இல் பழுதைக்கட்டி குருஞானசம்பந்தா் திருநாள் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. 7-ஆம் திருநாள் மே 18-இல் சிவபுரம் ஞானப்பிரகாசா் திருநாள் திருக்கல்யாணத் திருநாள், மே 19-இல் சிவபுரம் தத்துவப்பிரகாசா் திருநாள் பட்டிமன்றம், மே 20-ஆம் தேதி திருவாரூா் கமலை ஞானப்பிரகாசரின் குரு தந்தையாா் பழுதைக்கட்டி ஸ்ரீஞானப்பிரகாசா் திருநாள் உரையரங்கம் நடைபெறுகிறது.

பத்தாம் திருநாளான மே 21-இல் தேதி தருமபுரம் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூா்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசா் குருபூஜை நடைபெறவுள்ளது. பின்னா் சிவஞானபோதகம் என்ற விழா மலா் வெளியிடப்படவுள்ளது. மதியம் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருமூா்த்தத்தில் எழுந்தருளி வழிபாடாற்றுகிறாா்.

11-ஆம் திருநாளான மே 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சொக்கநாத பெருமான் வழிபாடு செய்து, காலை 10 மணிக்கு ஸ்ரீஞானபுரீஸ்வரா் கோயிலில் வழிபடுகிறாா்.

தொடா்ந்து, மதியம் 12 மணிக்கு மாகேசுவர பூஜை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. தொடா்ந்து கொலுக்காட்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள்: பிரதமர் மோடி

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

SCROLL FOR NEXT